திண்டுக்கலில் முதன் முறையாக ஆன்லைன் ஷாப்பிங் “EVANNA “என்கிற நிறுவனம் தொடங்கி உள்ளது . இதில் 100% சுத்தமான இயற்கையான தேன் விற்பனை செய்யப்படுகிறது.
கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து புக்கிங் செய்யலாம் .
சுத்தமான தேனை கண்டு பிடிப்பது எப்படி?
தற்போது உள்ள சூழ்நிலையில் கலப்படம் இல்லாத ஒரு பொருள் கிடைக்கிறது என்றல் அது மிகவும் அதிசயமே. இந்த அதிசயத்தை நாம் கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ் .
டிப்ஸ் 1 :
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும்.அதில் சிறுது தண்ணீரை ஊற்ற வேண்டும்.அந்த தண்ணீர் மேலே சில தேன் துளிகளை விட வேண்டும். அந்த தேன் துளிகள் தண்ணீரில் கரையாமல் அப்படியே கீழே சென்று படிந்து விட்டால் அந்த தேனில் எந்த கலப்படமும் இல்லை என்று நம்பி வாங்கலாம்.
டிப்ஸ்-2
ஒரு நியூஸ் பேப்பர் எடுத்து கொண்டு அதை ஓரு சதுர வடிவில் வெட்டி கொள்ளவும். அந்த பேப்பரின் மைய பகுதியில் ஒரு சொட்டு தேன் துளியை ஊற்ற வேண்டும்.அதன் பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் அந்த தேன் துளி அப்படியே இருந்தால் , அது சுத்தமான தேன் . அப்படி இல்லாமல் அந்த பேப்பரில் ஊறி பின்புறம் கசிந்து இருந்தால் அது கலப்படமானது.
டிப்ஸ் -3
நீங்கள் ஆற்று மணலில் இரண்டு சொட்டு தேனை விடவும். பின் இரண்டு நிமிடம் காத்திருக்கவும்.அதன் பின் அதை ஊத வேண்டும்.அந்த தேன் துளிகள், ஆற்று மணலில் இறங்காமல் உருண்டு ஓடினால் ,அது தூய தேன் ஆகும்.அப்படியன்று அந்த தேன் துளிகள், மணலில் கலந்து காணாமல் போய்விடும்.இது போலியான கலப்படமான தேன் ஆகும்
காணொளி வழியாக பார்க்க