நீங்கள் அசைவ பிரியரா? அதுவும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்குமா? உங்களுக்கான கட்டுரை இது. தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாநகரம் என்றாலே பூட்டுக்கும் , பிரியாணிக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது . இந்த பிரியாணியின் வரிசையில் திண்டுக்கல் தலைப்பக்கட்டி பிரியாணி என்றாலே மிகவும் சிறப்பு. இந்த திண்டுக்கல் தலைப்பக்கட்டி பிரியாணி 1957 – ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய திரு நாராயணசாமி நாயுடு அவர்களால் ஆனந்த விலாஸ் உணவகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது . சில வருடங்களுக்கு பிறகு தலைப்பக்கட்டி பிரியாணி என்ற பெயர் மாற்றம் அடைந்தது . திண்டுக்கல் மக்களால் கடந்த 50 வருடத்திற்கு மேலாக சிறந்த பிரியாணி என்றாலே திண்டுக்கல் தலைப்பக்கட்டி பிரியாணி என்று பெயர் பெற்றது. இன்று உலகம் முழுதும் திண்டுக்கல் தலைப்பக்கட்டி பிரியாணி மிகவும் சுவையான பிராணியாக திகழ்கிறது என்பதில் திண்டுக்கல் மக்களுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. நீங்கள் எங்கு சென்றாலும் திண்டுக்கல் தலைப்பக்கட்டி பிரியாணி என்ற உணவகம் கண்ணில் தென்பட்டால் , அங்கு சென்று உணவை உண்டு , அதன் சிறப்பை பதிவிடவும்.