Medicinal Uses of Honey [தேனின் மருத்துவ குணங்கள்]

Medicinal Uses of Honey [தேனின் மருத்துவ குணங்கள்]

நம் வாழ்கையில் அன்றாடம் பயன்படுத்தும் மிக முக்கியமான பொருள் இந்த தேன்.இந்த தேன் பற்றிய மிக முக்கியமான தகவல்களை இன்று தெரிந்து கொள்வோம்.

1 இந்த உலகில் மிக சிறந்த தேன் மனுக்கா தேன்  இந்த தேன் நியூஸ்லாந்தில் கிடைக்கிறது.இந்த தேன் மிகவும் விலையுயர்ந்த தேன்.பொதுவாக இந்த தேனில் விட்டமீன் மின்னல்ர்கள் உள்ளன.

5 வகையான தேன்

1.மலைத்தேன்

2.கொம்புத்தேன்

3.புற்றுத்தேன் (அடுக்கு தேன் )

4.மனைத்தேன்

5.பொந்துதேன்

1.மலைத்தேன்

     இந்த வகையான தேன் உயரமான மலைகளில் மற்றும், மரங்களில் கிடைக்கும் மிகவும் கடினப்பட்டு தான் இந்த தேனை எடுக்கமுடியும்.

2.கொம்புத்தேன்

            மரக்கொம்புகளில் தான் இந்த தேன் கிடைக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு.

3. புற்றுத்தேன் (அடுக்கு தேன் )

            புற்றுகளில் இந்த வகையான தேன் கிடைக்கும் அதாவது பாறை இடுக்குகளில் , செடிகளுக்கிடையில் ,கூடுகளில் ,வயல்களில் கிடைக்கும் எனவே இதுவும் அறிய வகை தேன்.

4.மனைத்தேன்

            வீட்டு மாடியில்,ஜன்னல்களில்,மரக்கம்கங்களில்,மிகவும் எளிமையான முறையில் இந்த தேன் கூடு இருக்கும்.மனிதர்களை பயமுறுத்தும்.

5.பொந்து தேன்

பொந்துகளில் கூடுக்கட்டி வாழும்.     மரபொந்து,மணல்பொந்து,மூங்கில் பொந்து,என எங்கு பொந்துகள் உள்ளதோ அதற்கு ஏற்றால்போல் கூடுக்கட்டி வாழும்

1.இதயம் சம்ந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தேன்னை எப்படி சாப்பிடுவது ?

            1.பூண்டு

            2.தேன்

        பூண்டில் உள்ள பத்து பற்களை எடுத்துக்கொண்டு தேனில் உறவைத்து பத்து நாட்கள் கழித்து ,அந்த பூண்டை சாபிட்டால் இதயம் சமந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்துவிடும் இதயத்துக்கு சீரான இதய துடிப்பு மற்றும் இரத்த கொதிப்பு போன்றவை சரியாகும்.இது எல்லா தரப்பு மக்களும் சாபிடலாம்.எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் நம் உடலில் உள்ள இதயத்தை ஆரோக்கியமான முறையில் இயற்கையாக நாம் சரிசெய்து கொள்ளலாம்.

2.நல்லா துக்கம் வரலையா  தேனை எடுத்து இத பண்ணுங்க

    1.பால்

    2.தேன்

ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்வில் குறைந்தது எட்டு மணிநேரம் தூங்கனும் அப்போது தான் நம் உடல் ஆரோக்கியமானதாக உணர்வீர்கள்.உங்களுக்கு துக்கம் வரவில்லை என்றால் தினமும் ஒரு டம்ளர் பாலை சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அந்த பாலை தினமும் சாப்பிட்டால் தூக்கம் வரும் இந்த தேன் கலந்த பால் மூளையில் உள்ள செரோடோன் என்கிற ஹார்மோனை தூண்டி தூக்கம் வருவதற்க்கு உதவி செய்யும்

3.சலி வரட்டு இருமல் இருக்கா கவலை வேண்டாம்

            1.எலுமிச்சை சாறு

            2.வெந்நீர்

            3.தேன்

ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சை சாறு (1/2  பழம்)கலந்து 1ஸ்பூன் தேன் கலந்து 3அல்லது 4நாட்கள் சாப்பிட்டால் வரட்டு இருமல்,சலி குணமாகும்.இந்த மாதிரி இயற்கையாக நாம் உணவையே மருந்தாக எடுத்துக்கொண்டால் நாம் மருத்துவரை தேடி போகவேண்டியதில்லை.

4.உடல் எடையை குறைக்கனுமா கெட்ட கொழுப்பு இருக்க இதற்கு என்ன செய்யனும்

            1.வேநீர்

            2.தேன்

            காலை வெறும் வயிற்றில் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு நிங்கும் பின்பு உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும்.

5.புற்று நோய்க்கு தேன் சரியான மருந்து

            அடிக்கடி நாம் தேன் எடுத்துக்கொண்டால் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் பெரும்பாலும் நாம் சாப்பிடும் சாப்பாடு இயற்க்கை சார்ந்து உள்ள உணவு பொருள்கள் நாம் உட்கொள்ளும் பொது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும்.

சுத்தமான தேனை கண்டு பிடிப்பது எப்படி

காணொளி வழியாக பார்க்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook