தமிழர் இசை பறை இசை , மார்கழியில் பறைதான் இசைக்கவேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது
மார்கழி என்பது இந்து சமய மக்கள் கொண்டாடும் விழா, அச்சமூகம் இசையால் இறைவனை அடையலாம் என போதித்த உன்னத மதம், இசையினை ஒரு தியானமாக யோகமாக ஆத்மாவில் இருந்து செய்யலாம் அதனால் ஆத்மார்த்த பக்தி செலுத்தலாம் என சொல்லிற்று
இது தமிழக இந்துக்களிம்ன் இலக்கியம் எங்கும் உள்ளது , இங்கு மெல்லிசையும் இன்னிசையுமேதான் கடவுளை வணங்க பயன்பட்டதே தவிட கொடும் இசை அல்ல
கொடும் இசையும், முரசும், பறையும் போர்களம் மற்றும் அதிமுக்கிய செய்திகளை சொல்ல பயன்பட்ட இசை கருவி தவிர வேறு அல்ல
தமிழக இந்துக்களும் பாரத மக்களும் மெல்லிசைதான் கடவுளை தியானிக்க உகந்தது என சொன்னார்கள்
வள்ளுவனே குழல் இனிது , யாழ் இனிது என்றானே தவிர பறை இனிது என சொல்லவில்லை
எது எது இறைவனை வணங்கும் இசை என இந்துமதம் வலியுறுத்தி சொன்னது, அதையும் தெய்வங்களின் கையில் கொடுத்து சொன்னது
கண்ணனுக்கு புல்லாங்குழல், நந்திக்கு மிருதங்கம், கலைவாணிக்கு வீணை அது அழகாக வரிசைபடுத்திற்றே தவிர எந்த தெய்வ கையிலும் பறை இல்லை
இதெல்லாம் பார்ப்பன புரட்டு என சொன்னால், அதி உன்னத நாயன்மார்களில் சம்பந்தர் பொற்றாளம் வைத்திருந்தார், திருநீலநக்க நாயனார் யாழ் வைத்திருந்தார் எந்த பக்தனும் பறை அடித்ததாக இலக்கியத்தில் இல்லை
பறை தமிழனின் ஒரே இசைகருவி என்பதெல்லாம் அபத்தம், அது செய்திகளை சொல்ல களத்துக்கு செல்வோரை உற்சாகபடுத்த, போரிலும் சுடுகாட்டிலும் ஒருவிதமான மனோநிலையினை கொடுக்க அடிக்கபட்ட ஒரு கருவி
அதை வைத்து கொண்டு இதனால்தான் இறைவனை தமிழன் வணங்கினான் என்பதெல்லாம் அபத்தம், அதை சொல்லி மார்கழியில் இன்னிசையோடு இறைவனை வணங்கும் இந்து பக்தர்களை வம்புக்கு இழுப்பது இன்னும் அபத்தம்
உண்மையில் தமிழரின் அடையாள இசை எது?
தமிழரின் தனிபட்ட இசைகருவி யாழ், பண்டைய தமிழ் இலக்கியம் அதனைத்தான் சொல்கின்றது
அவற்றை எல்லாம் இசைக்க மாட்டார்கள், ஏனென்றால் யாழும் தெரியாது, அதனை இசைக்கவும் தெரியாது, வரலாறும் தெரியாது
சும்மா எதனையாவது போட்டு அடித்து இதுதான் தமிழர் இசை, நடனம் என சொல்லி ஏதாவது செய்ய வேண்டியது
முதலில் கருப்பு சட்டையே தமிழர் பண்பாடு கிடையாது.
தூய வெண்ணிற ஆடையே தமிழர் மரபு. கருப்பு என்பது அமங்கலம் என்றும் தமிழ் பாரம்பரியத்திற்கு எதிரானதாகவுமே சொல்லபடுகின்றது
தமிழரின் தனிபெரும் இசைகருவி யாழ், முன்பொரு காலத்தில் தமிழன் அதில் திறமைபெற்றிருந்ததால் அந்த ஊர் யாழ்பாணம் என்றே அழைக்கபட்டது
உலகில் இசைகருவி பெயரால் அமைந்த மிகசில ஊர்களில் அதுவும் ஒன்று, யாழ்பாணம் என்பது தமிழரின் பெருமை மட்டுமல்ல, தமிழர் இசையில் வல்லவர்கள் அங்கு வசித்திருக்கின்றார்கள் என்ற பெருமை தாங்கி நிற்கும் ஊர்.
இந்த யாழில் பல வகை உண்டு, கீசக யாழ், மகர யாழ் என ஏராள வகை உண்டு
அவை எல்லாம் லண்டன் மியூசியத்தில் பத்திரமாக இருக்கின்றது, எந்த தமிழனும் அதை வாசித்ததாக தெரியவில்லை
புகழ்பெற்ற எந்த தமிழ் இசையமைப்பாளரும் அதனை பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை, அது கொஞ்சம் சிரமானது என்கின்றார்கள்
அந்த யாழில் சில வகைகள் இன்றும் வெள்ளையரால் வாசிக்கபடுகின்றன, சில சீன தேவதைகளும் வாசிக்கின்றன, அவை எல்லாம் யாழ் என்பதன் வேறு வடிவங்கள் (harp).
தமிழனின் யாழ் என்ற நரம்பிசை கருவியில் இருந்து பிறந்ததே வீணை, கிட்டார், வயலின் இன்னபிற
அக்காலத்தில் இங்குதான் வாசிகபட்டது பின் மேற்காசியாவில் பரவியது பின் ஐரோப்பாவிற்கு சென்றது, இன்று அதனை சிறிய வடிவமாக்கி வாசிக்கின்றார்கள்
தமிழக பண்டைய யாழ்களில் 1000 நரம்புகள் வரை எல்லாம் இருந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன.
அந்த யாழினை திறம்பட வாசிக்க இங்கு தமிழன் இல்லை, அப்படி ஒன்று இருந்ததையே மறந்துவிட்டுத்தான் தமிழன் இசை டண்டனக்கா என கிளம்புகின்றார்கள்
முடிந்தால் வெள்ளையனின் பியாணோ, கிட்டார் முதல் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு யாழ் வாசித்து காட்டுவார்களா?, தமிழனின் இசை கருவியினை மீட்டெடுத்த விஷயமாக இருக்கட்டும்
தமிழக இலக்கியங்களில் முரசரைந்த காட்சி உண்டே தவிர பறையடித்த காட்சிகள் மிக குறைவு.
ஆக பறை இசை மட்டும் தமிழர் இசை மற்றது எல்லாம் அடுத்தவன் இசை என்பதெல்லாம் அபத்தம்.
முடிந்தால் யாழினை படியுங்கள், அதுதான் தமிழரின் தனிபெரும் இசை கருவி
நாமும் கவனிக்கின்றோம் , இங்கு பறைமாதிரி விஷயங்களை பெரும் பிம்பமாக்குவது நாட்டார் வழக்காற்றியல் என சொல்லி ஊக்குவிக்கும் வெளிநாட்டு தொண்டு நிறுவணங்கள்
அவைதான் தமிழரின் தொன்ம விஷயங்களை எல்லாம் மறக்கடித்துவிட்டு, இந்த டண்டனக்கா என்ற உலகம் ஏற்க தயங்கும் விஷயங்களை தமிழர் பண்பாடு என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றன
இன்னமும் தெளிவுபெற வேண்டுமானால் சில கிறிஸ்தவ அல்லது இன்னபிற கல்லூரிகளின் இம்மாதிரி பிரிவு சில இருக்கின்றன, அங்கு சென்று பாருங்கள் உண்மை விளங்கும்
இங்கு தமிழனின் உண்மை முகத்தை மறைத்து தமிழன் மதமற்றவன், இசை அற்றவன், நாகரீகம் அற்றவன் என்ற கோர பிம்பம் அங்குதான் உருவாக்கபடுகின்றது
இந்த பறை எனும் காட்டுவாத்தியம் தமிழனின் அடையாளம் என்ற பிம்பம் அவர்களை போன்றவர்களால்தான் உருவாக்கபடுகின்றது
அதில் துளியும் உண்மை இல்லை, அதுதான் உண்மையான இன அடையாள அழிப்பு
அதை நம்புபவர்களும் அதை ஆமோதித்து பறை ஒன்றே தமிழர் இசை என வெறிபிடித்து கிளம்புவர்களும் தங்களை அறியாமல் தங்கள் இன அடையாளகளை ஒழிக்கின்றார்கள் என்பதுதான் பரிதாபம்.
இதற்கெல்லாம் மூல விஷயம் என்னவென்றால் தமிழனை இந்திய தேசியத்தோடு ஒட்டவிட கூடாத தந்திரம், இந்து என்றால் அவன் இந்தியனாகிவிடுவான், கலாச்சார இசைகள் என்றால் அப்படியே இணைந்துவிடுவான்
மாறாக அவனின் அடையாளத்தை அப்படியே மறைத்து இல்லா விஷயங்களை புகுத்தி அவனை அப்படியே இந்தியாவிற்கு எதிராக நிறுத்தும் பிரிவினை தந்திரமே அன்றி வேறு அல்ல..
பறை விடுதலையின் இசை என சில உளறல்கள் வேறு
உலகம் முழுக்க தேடி பார்க்கின்றோம், வெறும் மியூசிக் கோஷ்டி இசை அமைத்து விடுதலையோ நாடோ அடைந்ததாக வரலாறே இல்லை
இங்கு சில கோஷ்டிகள் பறை அடித்து விடுதலை, விலங்கொடிப்பு, இன விடுதலை , எழுச்சி என சொல்லிகொண்டே இருக்கின்றன.
அப்படி என்ன விடுதலை அடைந்து தனி தேசம் கண்டார்களோ தெரியாது, கேட்டால் சொல்லவும் மாட்டார்கள்
பறை இசை அடிமை விலங்கை உடைக்குமாம், பறையும் அதை அடிக்கும் குச்சிகள் உடையுமே அன்றி வேறேதும் நடக்காது
தென் ஆப்ரிக்கா முதல் அமெரிக்க போராளிகள் , சீனா வரை “தப்” அடிக்காமல் எப்படி உங்களுக்கு விடுதலை சாத்தியமானது என கேட்டால் தலையில் அடித்து கொண்டே நகருகின்றார்கள்
சரி மார்கழி மாதம் தமிழரி இசை பறை என சொல்லும் கும்பல் கிறிஸ்தவ பியாணொ கிடார் வாசிக்கும் இடங்களுக்கு சென்று பறை இசைக்க தயாரா? செய்வார்களா? என்றால் அப்பக்கம் செல்லவே மாட்டார்கள்
அதுதான் அவர்கள், அவர்களுக்கு கொடுக்கபட்ட பயிற்சியும் மூளைசலவையும் இந்துமதத்துக்கு மட்டும் எதிரானது