Great Idea Perfectly Executed by our CM
பத்து ரூபாய் பணத்தில் மீதம் ஐந்து ரூபாய் இருக்கிறது !
சென்னை மாநகாராட்சி தொடங்கி நடத்தி வரும் அம்மா உணவகம்!
கண்ணாடி கதவுகள் நம்மை வரவேற்க உள்ளே நுழைந்தவுடன் ஒரு
டோக்கன் கவுன்ட்டர் இருக்கிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய். ஒரு டோக்கன்
கூட கொடுக்கப்படுகிறது. ஐந்து ரூபாய்க்கு ஐந்து டோக்கன்கள் . அதன் பிறகு வரிசையில் நின்று இட்லிகளை வாங்கிகொள்ளலாம்.
டைல்ஸ் பதிக்கப்பட்ட பளீர் அறை. காற்றோட்டமாகவும்…..மின் விசிறிகள், ஈக்களை விரட்டும் ஈ விரட்டி இயந்திரம்…..நின்று கொண்டு சாப்பிட ஏதுவாக வட்ட வடிவிலான டைனிங் டேபிள்கள், உணவு கொடுக்கும் தட்டுகள் கூட சுத்தமாக துலக்கப்பட்டுள்ளன. பணிபுரியும் பணியாளர்கள் சுத்தமான ஆடைகள் உடுத்தி…உணவு சமைக்கும், பரிமாறும் பெண்கள் தலையில் “கவர்” அணிந்து இருக்கிறார்கள்…. கைகளில் க்ளவுஸ் அணிந்தே பணிபுரிகிறார்கள். இட்லிக்கு சாம்பார் மட்டும் தரப்படுகிறது.
நான் சாப்பிட்ட ஜாபார்கான்பேட்டை உணவகத்தில் இட்லியில் உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தது ஆனால் சுவையில் குறை இல்லை. சாம்பாரும் நன்றாகவே இருந்தது. இதையெல்லாம் விட… பணியாளர்கள் முகத்தில் மாநகராட்சி…அரசு அலுவலகங்களில்
பணிபுரியும் பெரும்பான்மை பணியாளர்கள் முகத்தில் இருக்கும் “சிடு சிடு” இல்லை. மாற்று திறனாளி ஒருவருக்கு, அவர் வரிசையில் நிற்க முடியாது என்பதால் டோக்கன் அளிக்கும் பெண்மணியே உணவை வாங்கி அவர் இருக்கும் இடத்திற்கு கொண்டு கொடுக்கிறார். கள்ள சந்தையில் இட்லிகள் விலை போய்விடகூடாது என்பதற்காக
இந்த உணவகங்களில் “பார்சல்” வசதி தடை செய்யப்பட்டுள்ளது.
மதிய உணவு சாம்பார் சாதம் 5 ரூபாய். தயிர் சாதம் 3 ரூபாய்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் சராசரி உணவகங்களில் உணவு சிப்பந்திக்கு “டிப்ஸ்” சாதரணமாக 10 ரூபாய் அளிக்கிறார்கள். ஆனால்…அந்த மதிப்பில் பாதியில் 5 ரூபாய்க்கு சுத்தமான சூழலில், கவுரமாக காலை உணவு தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது என்றால்…..சென்னை மாநகராட்சியின் “அம்மா உணவகம்” மலிவு விலை உணவகம் அல்ல……வருவாய் குறைவாக கிடைக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் விலை மதிப்பில்லா உணவகம்.