சிறுமலை

சிறுமலை

சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 25 கிலோமீட்டர்கள் (16 mi) அருகிலும், மதுரைக்கு 40 கிலோமீட்டர்கள் (25 mi) அருகிலும் அமைந்துள்ளது. சிறுமலை 60000 ஏக்கர் பரப்பளவுள்ளவை (200 கி.மீ).இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன. இல்லாக் பன்னாட்டுப் பள்ளியும் இங்கே அமைந்துள்ளது. ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய காட்டுப் பகுதி. விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலைவாழைப் பழங்கள் இனிப்பு மிகுந்தவை. மற்றும் புராணங்களில் கூறப்படும் அனுமன் இமயமலையை கையில் கொண்டு செல்லும் போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 7 கி.மீ.  செல்லவேண்டும். மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. செல்லும் வழியில் மலைமாதா கோவில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன. எலுமிச்சம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் அதிகமாக விளைகின்றன. இங்கு எப்போதும் இதமான சூழ்நிலை நிலவுகிறது. சிறுமலை வாழைப்பழம் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள். இங்கு அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

உயரம் 1,600 m (5,200 ft)

 

அமைவிடம் திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா

 

மலைத்தொடர் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

 

இங்கு இயற்கையோடு கூடிய மக்கள் விரும்பும் பல முக்கிய இடங்கள் உள்ளன.

அன்னை வேளாங்கன்னி தேவாலயம்

மலையின் உச்சியில் சரிவான பகுதியில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. செப்டம்பர் மாதம் ஆரோக்கி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறும்

சிறுமலை நீர்த்தேக்கம்

2010ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறு நீர்த்தேக்கமாகும். அடர்ந்துயர்ந்த மரங்களுக்கிடையே அமைந்துள்ளது. படகு சவாரியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் போதுமான நீர் இருந்தால் மட்டும் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது.

உயர் கோபுரம்

சிறுமலையின் 17வது கொண்டைஊசி வளைவில் இவ்விடம் அமைந்துள்ளது. அங்கிருந்து கீழே தெரியும் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க மிகவும் அருமையான இடம். திண்டுக்கல் நகரப்பகுதி முதல் சிறுமலையின் பிற மலைப் பகுதிகள் வரை கண்டுகளிக்கலாம்.

சஞ்சிவனி மலை

சிறுமலையின் ஒருபகுதியாக உள்ள இம்மலை. ராமாயனத்தில் ராவனனுடன் யுத்தம் நடந்தது. யுத்ததில் மயக்கமுற்ற லக்குமனனை எழுப்புவதற்குத் மூலிகை தேவைப்பட்டது. அதனை எடுத்துவர சென்ற அனுமான் மூலிகையை கண்டிறிய ஐயமுற்று மலையையே தூக்கிச் சென்றபோது அம்மலையிலிருந்து விழுந்த ஒரு சிறு துண்டாக சஞ்ஜீவினி மலை கருதப்படுகிறது.

சாதியாறு

சிறுமலையிலிருந்து புறப்படும் இந்நதி தென்புறமாக ஓடி வைகையில் கலக்கிறது. இக்கழிமுகப் பகுதி 819 சதுர கி.மீ. (316 ச.மைல்). நீர் பாய்ச்சல் பரப்பு 4279.89 ஹெக்டேர் (10575.8 ஏக்கர்). வாடிப்பட்டி அருகில் இவ்வாற்றின் குறுக்கே சாதியாறு அணை விவசாய பாசனத்துக்காக கட்டப்பட்டுள்ளது. பாசன பகுதிகள் மதுரை மாவட்டத்திலுள்ளன.

வெள்ளிமலை முருகன் கோவில்

சமவெளியிலிருந்து 45 நிமிடங்கள் நடந்து செல்லும் தூரத்தில் மலையில் அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் இக்கோவில் அமைந்துள்ளது.

கான்டிஜ் எஸ்டேட்

சிறுமலையில் 1000 ஏக்கர்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதிலிருந்து 3 ஆறுகளும் 2 நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இப்பகுதியில் 120-132 செ.மீ. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மலையாகப் பொழிகிறது.20-30000 ஏக்கர் ஒதுக்குக் காடுகளைக் கொண்டுள்ளது. மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய இயற்கை வளமாக உள்ளது. காடு ஒழிப்பை தடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையைப் பாதுகாக்கும் அரனாக இம்மலை உள்ளது.

செல்வி கோவில்

நீ்ள் வட்ட வடிவில் சின்னமலைக்கும் திண்டுக்கல்லுக்கும் நடுவில் இயற்கை எழில்மிகு பார்வையில் இக்கோவில் அமைந்துள்ளது.

அகஸ்தியர்புரம்

அகஸ்தியர் என அழைக்கபட்ட சித்தர் இங்கு தங்கியிருந்ததால் இப்பகுதி அகஸ்தியர்புரம் என அழைக்கப்படுகிறது. பழங்காலம் முதல் பல்வேறு சித்தர்கள் வசித்த இடமாக கருதப்படுகிறது. மருத்துவ தாவரங்களும், மூலிகைச் செடிகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது. இப்பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது.

வெள்ளிமலை

அகஸ்தியர் புரத்தில் வெள்ளிமலை காணப்படுகிறது. சிறுமலையிலேயே மிக உயர்ந்த மலை இதுவாகும். இம்மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. கலியுகத்தில் மக்களால் இது திருடப்பட்டுவிடும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாகி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். இம்மலையின் உச்சியில்தான் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது. 30-45 நிமிடங்கள் நடந்துசென்று இவ்வுச்சியை அடையலா

reference :
https://ta.wikipedia.org/wiki/
https://dindigul.nic.in/ta/tourist-place

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook