4 வகையான நிறம் கொண்ட பாக்கெட்டுகள்
• நீலம்(Blue)
• பச்சை(Green)
• ஆரஞ்சு(Orange)
• மெஜந்தா (Magenta)
நீலம் (Blue):
100 கிராம் பாலில் 3 கிராம் அளவு கொழுப்புச்சத்தும், 3.2 கிராம் அளவு புரதமும், 4.7 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 700 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 60 கிலோ கலோரியும் உண்டு.
• சமன்படுத்தப்பட்டபால்.
• எளிதில்ஜீரணமாகும்.
• குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்களுக்குஏற்றது
பச்சை (Green):
100 கிராம்பாலில் 4.5 கிராம் அளவு கொழுப்புச்சத்தும், 3.2 கிராம் அளவு புரதமும், 4.7 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 700 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 74 கிலோ கலோரியும் உண்டு.
- நிலைப்படுத்தப்பட்ட பால்.
- கொழுப்புச் சத்து சற்று அதிகம் உண்டு.
- இளம் வயதினர், நடுத்தர வயதில் இருப்பவர்கள் எடுத்துகொள்ளலாம்.
- 40 வயதுக்குட்பட்டவர்கள் வரை இதை எடுத்துகொள்ளலாம்.
ஆரஞ்சு (Orange):
100 கிராம் பாலில் 6 கிராம் அளவு கொழுப்புச் சத்து நிறைந்திருக்கிறது. 3.4 கிராம் அளவு புரதமும், 4.9 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 740 மி.கிராம் அளவுதாது உப்புக்களும், 904 கிலோ கலோரியும் உண்டு.
- கொழுப்புச் சத்து நிறைந்தபால்.
- பெரும்பாலும் இனிப்பு பண்டங்கள் செய்யும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவிர்ப்பதே நல்லது.
- ஃபுல்க்ரீம்மில்க் என்றும் அழைக்கப்படுகிறது.
- வீட்டில் விருந்தினர்கள் அதிக அளவு வந்திருந்தாலோ அல்லது கூட்டம் அதிகளவு உள்ள இடங்களில், பால், காபி மற்றும் டீ ஆகியவை தயாரிக்க இவை சிறந்த தேர்வாகும். ஏனெனில் கொழுப்பு அதிகமாக உள்ளதால் அதிகளவு நீர் ஊற்றினாலும் பால் நீர்த்துப்போகாது.
மெஜந்தா (Magenta):
100 கிராம் பாலில் 1.5 கிராம் அளவே கொழுப்புச் சத்து நிறைந்திருக்கிறது. 3.4 கிராம் அளவு புரதமும், 4.9 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 740 மி. கிராம் அளவு தாது உப்புக்களும், 484 கிலோ கலோரியும் உண்டு.
- குறைவான அளவு கொழுப்பு உள்ளது
- உடல் குறைய நினைப்பவர்களும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த பாலை பயன்படுத்தலாம்.
- டபுள்டோண்ட்மில்க் என்றுஅழைக்கப்படுகிறது