- பெரும்பாலான இருசக்கர வாகனத்திலும் சைலென்சர் வலது பக்கம்தான் இருக்கும். அத்துடன் கிக் ஸ்டார்ட்டும் வலது பக்கம்தான் வழங்கப்பட்டிருக்கும். இவை இரண்டும் வலது பக்கம் இருப்பதால், சைடு ஸ்டாண்டை வலது பக்கம் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
2. அனைவரும் இடது பக்கத்தில் இருந்துதான் பைக்கில் ஏறுவார்கள். அதாவது இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மேலே தூக்கி போட்டு பைக்கில் அமர்வார்கள். அவர்களால் இடது காலை பைக்கின் மேலே தூக்கி போட்டு உட்கார முடியாது . எனவே வலது பக்கம் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது,
3. ஒரு பைக்கில் சைடு ஸ்டாண்டு இடது பக்கத்திலும், ஒரு பைக்கில் சைடு ஸ்டாண்டு வலது பக்கத்திலும் இருந்தால், அவற்றை பார்க்கிங் செய்வதில் சிரமங்கள் ஏற்படும். எனவே அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியாக இடது பக்கமே சைடு ஸ்டாண்டுகளை வழங்குகின்றன.