திண்டுக்கல்லில் பூட்டு முதன் முதலாக பரட்டை ஆசாரி என்பவரால் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது. விதம் விதமான பூட்டுகள் திண்டுக்கல் மண்ணில் தயாராகின. கள்ள சாவி போட்டு பூட்டை திறக்க முயன்றால் கைகளை வெட்டும் வகையிலான தொழில்நுட்பங்களும் கூட திண்டுக்கல் பூட்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. அலுமினிய, பித்தளை, மற்றும் குரோமிய பூச்சு செய்யப்பட்டு தயாரிக்கப்படும். திண்டுக்கல் நல்லாம்பட்டி, பாறைப்பட்டி, நாகல்நகர்புதுார், அனுமந்தநகர், பெருமாள் கோவில்பட்டியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் பூட்டு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளன.பூட்டு தயாரிக்கும் தொழிலைக் குடிசைத் தொழிலைப் போல பல இடங்களில் செய்து வருகின்றனர்.திண்டுக்கல் பூட்டு… திருடனால கூட திறக்க முடியாது. பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில்.இதனை ஒழுங்குபடுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர். 1945 திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது.பல ஆண்டு காத்திருப்பின் வெற்றியாய் கடந்த வியாழக்கிழமை (29.8.19), திண்டுக்கல் பூட்டிற்கும், காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.பூட்டு பற்றி சொல்லும்போது சாவி பற்றியும் சொல்லியாகவேண்டும். செட்டிநாட்டுப் பகுதிகளில், இன்றைக்கும் பல வீடுகளில், கதவுடன் கொண்ட பூட்டு பொருத்தப்பட்டிருக்கும். அதன் சாவியைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு உள்ளங்கை நீளத்தை விட பெரிதாகவே இருக்கும். தவிர, அந்தச் சாவி கனமாகவும் இருக்கும்.
மாங்காய்ப் பூட்டு
சதுரப் பூட்டு
அலமாரிப் பூட்டு
இழுப்பான் பூட்டு
மணிப்பூட்டுகள் என்று பல வகையான பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.திண்டுக்கல் பூட்டு தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் திண்டுக்கல்லிருந்து பூட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை எவ்வளவு தெரியுமா?
22 கிலோ!