“கையாலாகாத அரசு’ என்று தி.மு.க. ஆட்சி மீது கடுமையாகக் குற்றம்சாட்டி, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யை 2011 சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிட்டார் ஜெய லலிதா. ஏராளமான இலவச அறிவிப்புகள், விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுதல், மின்தடையை ஒழித்தல், விவசாய மறுமலர்ச்சி என வாக்குறுதிகளுக்குப் பஞ்சமேயில்லை. தமிழக மக்கள் தீர்ப்பும் ஜெ.வை மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்குக் கொண்டு வந்தது. மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று, இரண்டாவது ஆண்டை (மே 16) நிறைவு செய்யும் ஜெ., தேர்தல் சமயத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எந்தளவு நிறைவேற்றியிருக்கிறார் என்பதை விரிவாக அலசக் களமிறங்கினோம்.
பதவியேற்ற நாளில் கோட்டைக்கு வந்த ஜெ. 7 திட்டங் களுக்கு கையெழுத்திட்டார். அதன்பிறகு ஆளுநர் அறிக்கை யிலும், பட்ஜெட்டிலும் மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப் பட்டன. இவற்றில் பல ஏழை-நடுத்தர மக்களின் நலன் சார்ந்தவை என்பதால் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளும் அதி கரித்தன.
20 கிலோ இலவச அரிசித் திட்டம்
வெள்ளை நிற ரேஷன் கார்டு தவிர மற்ற கார்டுகளுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி என்கிற இந்தத் திட்டம் ஏழை மக்களின் வரவேற்பிற் குரிய திட்டம். தி.மு.க ஆட்சியில் கிலோ 2 ரூபாய் எனவும் பிறகு 1 ரூபாய் எனவும் மாற்றப்பட்ட திட் டம், ஜெ. ஆட்சியில் இலவச அரிசி என்கிற நிலைக்கு உயர்ந்தது. நகரப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப்புற ஏழைகளுக்கு இத்திட்டம் நிறையவே பயனளிக்கிறது. மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் அரிசி யை, விலையில்லா அரிசி என மாநில அரசு வழங்கிவருகிறது.