தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலையிட்டு மரியாதை !
இன்று நாம் தொடங்கியிருக்கும் ‘நாம் தமிழர்’ கட்சி என்பது சீமான் அவர்கள் தொடங்கியது இல்லை . அது ‘தினத்தந்தி’ பத்திரிக்கையின் முன்னாள் அதிபர் மறைந்த பெரியவர் சி.பா . ஆதித்தனார் அவர்களால் தொடங்கப்பட்டது . செந்தமிழ் பேசும் தமிழ் நாட்டிலே தமிழனுக்கு என்று ஒரு பத்திரிகை இல்லையே… எல்லாம் பார்ப்பனன் கையில் அல்லவா இருக்கிறது, அவனது செய்திகளை தானே நாம் நம் செய்திகளை போல பாவித்து வருகிறோம் . ஆகவே தமிழனுக்கு என்று ஒரு பத்திரிகை வேண்டும் என்ற உந்துதலால் அவர் தொடங்கியது தான் ‘தினத்தந்தி’ பத்திரிகை.
அவரே பிறகு தமிழனுக்கு என்று ஒரு கட்சி இல்லையே.. என்னவோ திராவிடம் இந்தியம் என்று நீட்டி முழக்கிக் கொண்டு கண்ட கண்ட கட்சிகள் தானே தமிழகத்தில் இருக்கின்றன அவற்றின் தலைவர்கள் கூட தமிழர்களாக இல்லாமல் தெலுங்கர்களாக இருக்கிறார்களே என்ற ஆற்றாமையால் அவர் தொடங்கியது தான் ‘நாம் தமிழர்’ என்கிற கட்சி. நாளடைவில் இவரது பெருவேகம் கண்டு பயந்த மத்திய காங்கிரஸ் அரசு என்னத்தையோ சொல்லி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அவருக்கு வழங்கி அவரை தன பக்கம் இழுத்துக் கொண்டது. அப்போதும் அவர் சொன்னார், “நான் தொடங்கிய ‘நாம் தமிழர்’ கட்சி முற்று பெற்றுவிடவில்லை அதன் தேவை பிற்காலத்தில் ரொம்பவும் தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் . அப்போது என்னை விட ஆற்றல் மிகுந்த இளைஞர்கள் இந்தக் கட்சியை புதிதுப்படுத்தி இன்னும் உத்வேகமாக கொண்டு செல்வார்கள் ” என்று சொன்னார். என்ன ஒரு தீர்க்கதரிசனம் ! அவர் சொன்னது போலவே தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் ‘நாம் தமிழர் ‘ கட்சி சீமான் தலைமையில் பெருந்திரளான இளைஞர்களின் கட்டமைப்பில் பேரெழுச்சி பெற்று இதோ உங்கள் முன்னால் …..