2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு!

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். கடந்த சட்டபை தேர்தல் பிரசாரத்தில் திமுக சார்பில் களமிறக்கப்பட்ட வடிவேலு, தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, இப்போது யுவராஜ் இயக்கும் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமான் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த தகவலை இசையமைப்பாளர் இமானே தெரிவித்துள்ளார். இந்தப் படத்துடன் மேலும் 3 படங்களில் நடிக்க வடிவேலு தயாராகி வருகிறாராம்..

Be the first to comment on "2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு!"

Leave a comment

Your email address will not be published.


Connect with Facebook

*