நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது

நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார். நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதையும் கிட்டத்தட்ட அறிவித்துவிட்டது பாஜக. மோடியை முன் நிறுத்துவதை பாஜவுக்குள்ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலையில், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லிணக்கவாதிகள், பொருளாதார அறிஞர்கள் என பல மட்டங்களிலும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதரா அறிஞரான அமர்த்தியா சென் கடுமையாக எதிர்த்துள்ளார் மோடியை. அவர் இன்று அளித்த பேட்டியில், “மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரதமராக ஏற்க முடியும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே செல்லவில்லை. சிறுபான்மையினருக்கு மட்டும் என்றல்ல… நான் சிறுபான்மையில் ஒருவன் இல்லை… பெரும்பான்மை மக்களுக்கும்கூட அவர் என்ன செய்துவிட்டார்? 2002-ல் அவர் செய்தது திட்டமிட்ட வன்முறை. மோடியை அங்கீகரிப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் தரப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம். இந்திய பிரதமராக விரும்பும் எந்த இந்திய குடிமகனுக்கும் இல்லாத பயங்கரமான வன்முறை பின்னணி மோடிக்கு உள்ளது. அவரை ஏற்கக் கூடாது. குஜராத்தில் சில உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கலாம். ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அந்த மாநிலம் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய. சகிப்புத் தன்மையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நிலை உள்ளது என பெரும்பான்மை மக்கள் எண்ணுமளவுக்கு மோடி நடந்து கொள்ளவில்லை,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook