கூகுள் தேடலில் டிரெண்ட் ஆன பக்கோடா தமிழ்நாடு முதலிடம்

கூகுள் தேடலில் டிரெண்ட் ஆன பக்கோடா தமிழ்நாடு முதலிடம்

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனியார் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியில், “ பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்பு தான்,பக்கோடா விற்பனை செய்யும் நபர் வீட்டிற்கு ரூ. 200 கொண்டு சென்றால் அதனை வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா, இல்லையா?,”என பேசியிருந்தார். இதனை தாக்கும் வகையில் ஹர்திக் பட்டேல் பேசுகையில், “டீக்கடைக்காரர் இப்படிதான் பேசுவார், பக்கோடா கடை வைப்பதையும் அவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாக கருதுவார்கள். நிச்சயமாக பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமலே இருக்கிறார்,”என குறிப்பிட்டு இருந்தார்.
பிரதமர் மோடி பக்கோடா விற்பனை செய்து ரூ. 200 சம்பாதிக்கலாம் என்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு வெளியே போராட்டமும் நடைபெற்றது.
பக்கோடா விற்பனை தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சை மையப்படுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் விமர்சனம் செய்து இருந்தார்.
 “பக்கோடா விற்பனை செய்வதை பிரதமர் வேலைவாய்ப்பு என குறிப்பிட்டு உள்ளார். அந்தவகையில் பார்த்தால் பிச்சையெடுப்பது கூட வேலைதான். ஏழ்மை அல்லது முடியாமை காரணமாக வாழ்க்கைக்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களையும் ‘வேலை வழங்கப்பட்டவர்களாக’ என எண்ணிக்கையை தொடங்குங்கள்,”என குறிப்பிட்டு உள்ளார்.
பின்னர் இந்த பக்கோடா தொடர்பான விவாதம்  பாரதீயஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்களால் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
[amazon_link asins=’B072N2T15Z,B00BYQEIJS,B004KSIY6K,B073W94Y4C,B0731JCW5X,B01NALGFSP,B07219W3GC,B078HDGG7T,B071X6KZFC’ template=’ProductCarousel’ store=’dindigul-21′ marketplace=’IN’ link_id=’a633c64a-0ccd-11e8-b6ea-cf2bba77654e’]
கூகுளில் கடந்த வாரம் அதிகமாக தேடப்பட்ட சொல் “பக்கோடா”. இதற்கு முன் இந்தியர்கள் பக்கோடாவை தேடியது தீபாவளி சமயத்தில்தான்,
தற்போது டிரெண்ட் ஆக காரணம், ‘பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்பு தான்’ என பிரதமர் மோடி சொன்னது. இந்த ‘பக்கோடா’ தேடலில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook