விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய், அமலாபால் நடிக்கும் தலைவா திரைப்படத்தைப் பற்றிய செய்திகள் தான், சமீபகாலமாக ரசிகர்களின் ‘அப்படியா?’ கேள்விகளாக இருந்து வருகின்றன

 

தலைவா அரசியல் படமாமே? அரசியல் படம் இல்லையாமே? போன்ற பல செய்திகள் அட்ரஸ் இல்லாமலே பறக்க, கடைசியாக விஜய்யின் தலைவாவும், சூர்யாவின் சிங்கம் 2-ம் ஒரே சமயத்தில் ரிலீஸாகப் போகிறதாமே? என்பதில் வந்து நின்றிருக்கிறது. ஆனால் இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் ரிலீஸாகப் போவதிலை என்கிறது கோடம்பாக்கம்.
தலைவா திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜ் சமீபத்தில் தான் இந்தி படப்பிடிப்பை முடித்து ரிலாக்ஸ் ஆகியிருக்கிறாராம்.அவரது காட்சிகள் படமாக்கப்பட்டு அது இது என பல வேலைகள் ’பல்க்’-ஆக இருக்கின்றன தலைவா படக்குழுவிற்கு.
படம் தான் வரவில்லை பாடல்களையாவது கேட்போம் என தலைவா திரைப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷை டுவிட்டரில் ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சியான செய்தி தான்.
‘உங்களுக்கும் சைந்தவி அக்காவுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். தலைவா பாடல் வெளியீடு எப்போது என்று சொன்னால் நன்றாக இருக்கும்’ என ஒரு ரசிகர் ஜி.வி.பிரகாஷை திருமண நினைவுகளில் தள்ள ” தளபதி(விஜய்) பிறந்தநாளன்று(ஜூன் 22) பாடல்கள் வெளியிடப்பட்டும். என் பிறந்தநாளன்று(ஜூன் 13) பாடல்களின் லிஸ்ட் வெளியிடப்படும்” என சகலத்தையும் கூறிவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.

 

Be the first to comment on "விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்!"

Leave a comment

Your email address will not be published.


Connect with Facebook

*