பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க போலீசில் தனிப்படை அமைப்பு !!

சென்னை: இணையதளத்தில் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கண்காணிக்க போலீசில் இணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் இணையதளத்தில் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை

பயன்படுத்துகின்றனர். கம்ப்யூட்டரில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த இணையதளங்கள், இப்போது செல்போனுக்கும் வந்த பிறகு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.இந்த இணையதள பக்கங்களை சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக அவ்வப்போது போலீசுக்கு புகார்களும் வருகிறது. இதனால் சென்னை போலீசார் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று காலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க, இணை கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்தபோது, சமீபத்தில் மாணவர் போராட்டத்தை பேஸ்புக், டுவிட்டர் என இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்தோம். செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம். எஸ்எம்எஸ் கொடுத்தாலும் போலீசார் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். இதனால், அவர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், இனி பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை நாங்கள் கண்காணிப்போம். அதில் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்வோம். அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு குறிப்பிட்ட பேஸ்புக் முகவரியை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Be the first to comment on "பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க போலீசில் தனிப்படை அமைப்பு !!"

Leave a comment

Your email address will not be published.


Connect with Facebook

*