‘குருவிற்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருந்தது’

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை செயல் நிர்வாகியான குருநாத்துக்கு சென்னை, துபாயில் உள்ள கிரிக்கெட் சூதாட்ட தரகர்களுடன் எப்பொழுதுமே தொடர்பு இருந்தது என்று அவரது மைத்துனரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஸ்ரீனிவாசனின் மகனுமான அஸ்வின் தெரிவித்துள்ளார்.

குடும்ப பிரச்சனையால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஸ்ரீனிவாசிடமிருந்து விலகி உள்ள அவரது மகன் அஸ்வின் (44) , அவரது மைத்துனரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைமை செயல் நிர்வாகியுமான குருநாதிற்கு எப்பொழுதும் துபாய், சென்னை போன்ற இடங்களில் இருந்த இடைத்தரகர்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிவித்துள்ளார். 

இதுக்குறித்து அவர் கூறுகையில், குருவுக்கு சென்னை மற்றும் துபாயைச் சேர்ந்த பல்வேறு பிரபல தரகர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த தொடர்பு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பில் இருந்தே இருந்தது. சைட் பிசினஸாக துவங்கியது ஆண்டுகள் செல்ல செல்ல பெரிய வியாபாரமாகவிட்டது

Be the first to comment on "‘குருவிற்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருந்தது’"

Leave a comment

Your email address will not be published.


Connect with Facebook

*